பெரும் பரபரப்பு.. கன்னியாஸ்திரிகளிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் !!
பெரும் பரபரப்பு.. கன்னியாஸ்திரிகளிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் !!

கன்னியாஸ்திரிகளிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தரக்குறைவாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சமாதானபுரதில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ராணி, தேவசாந்தி ஆகிய இருவரும் கன்னியாஸ்திரியாக உள்ளனர். இவர்கள் இருவரும் திம்மயம்பட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்குக ஜெபம் செய்வதற்காக சென்றிருக்கிறார்கள்.
இதைக்கண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் கணேஷ்பாபு (38) தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 20க்கும் மேற்பட்டோர் கன்னியாஸ்திரிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தைகள் பேசி திட்டியுள்ளனர்.

அதோடுமட்டுமல்லாமல், கன்னியாஸ்திரிகள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டும், செல்போனை பிடுங்கி கொண்டும் அவர்களை திட்டி விரட்டி உள்ளனர். இதனையடுத்து கால்நடையாக கிறிஸ்தவ சபைக்கு வந்தவர்கள் நடந்த நிகழ்வு குறித்து அங்கிருந்தவர்களிடம் விளக்கியுள்ளனர். பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், கன்னியாஸ்திரிகளிடம் இருவரும் அநாகரிகமாக நடந்துகொண்டது உறுதியானது. இதனையடுத்து கணேஷ் பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
newstm.in

