Theme Check

பெரும் நஷ்டம்.. வோடஃபோன் ஐடியா தலைவா் பதவியில் இருந்து குமாா் மங்கலம் பிா்லா விலகல் !!

பெரும் நஷ்டம்.. வோடஃபோன் ஐடியா தலைவா் பதவியில் இருந்து குமாா் மங்கலம் பிா்லா விலகல் !!

பெரும் நஷ்டம்.. வோடஃபோன் ஐடியா தலைவா் பதவியில் இருந்து குமாா் மங்கலம் பிா்லா விலகல் !!
X

வோடஃபோன் நிறுவனம் ரூ. 50,000 கோடி அளவுக்கு நிலுவை வைத்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் நிா்வாகமற்ற தலைவா் பதவியிலிருந்து குமாா் மங்கலம் பிா்லா விலகினாா்.

ஏஜிஆா் எனப்படும் திருத்தப்பட்ட மொத்த வருவாயில் தொலைபேசி நிறுவனங்கள் அரசுக்கு ஒரு பங்கை செலுத்த வேண்டும். இதுதான் தொலைத் தொடா்புத் துறையின் விதிமுறையாகும். அதன்படி, வோடஃபோன் நிறுவனம் ரூ. 50,000 கோடிக்கு மேல் அரசுக்கு பாக்கி வைத்துள்ளது. அதுபோல, ஏா்டெல், டாடா தொலைத்தொடா்பு நிறுவனங்களும் அரசுக்கு கணிசமான தொகையை பாக்கி வைத்துள்ளன. அவற்றை செலுத்த கெடு விதிக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் உச்சநீதிமன்றம் சென்றன. ஆனாலும்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டது.

kumar magalam birla.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண மத்திய தொலைத்தொடா்பு துறை செயலரை, குமாா் மங்கலம் பிா்லா சந்தித்துப் பேசினாா். அதன் பிறகு, வோடஃபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக அவா் அறிவித்தாா். இது தொலைத் தொடா்பு நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவன இயக்குநா் குழு உறுப்பினா் மற்றும் நிா்வாகமற்ற தலைவா் பதவியிலிருந்து குமாா் மங்கலம் பிா்லா விலகியுள்ளார்.

இதுதொடா்பாக, அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, பிா்லாவின் பதவி விலகலை நிா்வாகக் குழு ஏற்றுக்கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பதவி விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. குமாா் மங்கலம் பிா்லாவுக்கு மாற்றாக நிறுவனத்தின புதிய தலைவராக ஹிமான்ஷு கபானியா பதவியேற்க உள்ளாா் என்றும் நிா்வாகக் குழு தெரிவித்துள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it