தங்க நகைப் பிரியர்களுக்கு பெருமகிழ்ச்சியான செய்தி !!
தங்க நகைப் பிரியர்களுக்கு பெருமகிழ்ச்சியான செய்தி !!

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தங்கம் வாங்க இது உகந்த நேரம் எனலாம். கடந்த சில நாட்களாக உயர்ந்த தங்கம் விலை தற்போது குறைந்து வருவதையே இதற்கு காரணம்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 496 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,120-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 62 ரூபாய் குறைந்து, ரூ.4,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,300 ரூபாய் குறைந்து ரூ.75,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
Next Story

