தமிழர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்! தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் ஸ்ரீதர் வேம்பு !
தமிழர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்! தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் ஸ்ரீதர் வேம்பு !

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவை மத்திய அரசு நியமித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் செயல்படும் ஆலோசனைக் குழுவில் ஸ்ரீதர் வேம்பு உறுப்பினராக செயல்படுவார். அவர் அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீதர் வேம்பு பிப்ரவரி 3 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், "தொழில்நுட்பம் சார்ந்த கிராமப்புற பகுதிகளை மேம்பாட்டு அடையவைக்க வேண்டும் என்பது எனது லட்சியம். அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தாகத்துடன் இந்தியா திரும்பினேன். தற்போது எனக்கு அளிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவி மூலம் நாட்டுக்கு பணியாற்ற நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
I want to thank Shri Ajit Doval-ji for appointing me to to the National Security Advisory Board (NSAB). 🙏🙏
— Sridhar Vembu (@svembu) February 3, 2021
I returned to India to serve the cause of technology led rural development and this advisory role affords me another opportunity to be of service to the nation.
தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக ஸ்ரீதர் வேம்பு, தஞ்சாவூர் அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்கா, சிலிக்கன் பள்ளத்தாக்கில் பணியாற்றி வந்தார். கிராமப்புறங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என கருதிய ஸ்ரீதர் வேம்பு,
சோஹோ என்னும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை இந்தியாவில் முதன்முதலில் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உட்பட 8 நாடுகளில் விரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

