பெரும் அதிர்ச்சி! ஆறு மாத குழந்தை நரபலி!!
பெரும் அதிர்ச்சி! ஆறு மாத குழந்தை நரபலி!!

தஞ்சையில் ஆறுமாத குழந்தையை நரபலி கொடுத்தாக ஏழு பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த நசுருதீன் – ஹாஜிரா தம்பதிக்கு ஆறு மாத பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று இரவு ஹாஜிரா தூக்கத்திலிருந்து எழுந்துபார்த்தபோது குழந்தை காணவில்லை.
குழந்தையை வீடு முழுவதும் தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த தொட்டியில் குழந்தை சடலமாக இருந்தது. பிறகு, யாருக்கும் தெரியாமல் குழந்தையை அடக்கம் செய்தனர். இதுகுறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் போலீஸார் நசுருதீன் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை வெளியே எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து பிறகு மீண்டும் அடக்கம் செய்தனர்.

நசுருதீன் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காகக் கேரளாவைச் சேர்ந்த மாந்திரீக சாமியாரைச் சந்தித்தனர்.
அப்போது, அவர் 21 கோழிகள் உயிர் பலி கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தும் குடும்ப பிரச்சனை தீரவில்லை என்றால் உங்கள் வீட்டில் ஒருவரை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நசுருதீனின் ஆறுமாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் குழந்தையை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. எனவே நசுரூதீன் குடும்பத்தில் உள்ள ஏழு பேரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

