பெரும் அதிர்ச்சி.. ஒரே காவல்நிலையத்தில் 12 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு !!
பெரும் அதிர்ச்சி.. ஒரே காவல்நிலையத்தில் 12 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு !!

ஒரே காவல் நிலையத்தில் 12 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பபட்டு தொற்று மிகவேகமாக பரவி வருகிறது. இதனால் மக்களும் மருத்துவத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் தொற்றுபாதிப்பு தற்போது மிகத்தீவிரமாக உள்ளன.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு,மாநகராட்சி ஊழியர்கள், தனியார் ஜவுளி கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் என தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் 81 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. குரோம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல இரண்டு துணிக்கடைகளின் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மக்களிடம் பரவி கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பல்லாவரம் காவல் நிலையத்தில் சில போலீசாருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனால் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரவி உட்பட 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கொரோனா பாதிப்பின் தீவிரம் வகையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏழு காவலர்கள் வீட்டு தனிமையிலும் இரண்டு காவலர்கள் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டன. ஒரே காவல் நிலையத்தில் 12 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in

