பெரும் அதிர்ச்சி.. ஒரே நாளில் கொரோனாவுக்கு 50 டாக்டர்கள் பலி !!
பெரும் அதிர்ச்சி.. ஒரே நாளில் கொரோனாவுக்கு 50 டாக்டர்கள் பலி !!

இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதிலும் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதிலும் முன்கள பணியாளர்களின் முக்கியமானவர்களான மருத்துவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் மருத்துவர்களும் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, இந்திய மருத்துவ சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்து உள்ளனர். இந்த இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலும் குறிப்பாக கடந்த 16ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 பேரும், டெல்லியில் 27 பேரும் தங்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மருத்துவர்கள் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டது.
இவர்களில் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித் என்ற 25 வயது இளம் டாக்டரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற 90 வயதான மூத்த டாக்டரும் அடங்குவர் என இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே கே அகர்வால் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, மற்றொரு புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இறந்துவிட்டதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறினாலும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய மருத்துவ சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமேபதிவு செய்து உள்ளனர். இருப்பினும், இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர் என்பதே இதற்கு காரணம்.
newstm.in

