Theme Check

பெரும் அதிர்ச்சி.. யானை மிதித்து வேட்டை தடுப்பு காவலர் உயிரிழப்பு !!

பெரும் அதிர்ச்சி.. யானை மிதித்து வேட்டை தடுப்பு காவலர் உயிரிழப்பு !!

பெரும் அதிர்ச்சி.. யானை மிதித்து வேட்டை தடுப்பு காவலர் உயிரிழப்பு !!
X

யானையை வனப்பகுதியில் விரட்டச்சென்ற காவலரை யானை கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் பண்ணைப்பட்டி பகுதியில் ஒற்றை யானை ஒன்று விளைநிலப் பகுதிக்குள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள், விவசாயிகள் தெரிவித்தனர். விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு, யானை நடமாட்டத்தால் அச்சத்துடன் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து யானையை கண்காணித்து வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் இறங்கினர். இதற்காக வேட்டை தடுப்பு காவலர்களை, அப்பகுதிக்கு அனுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர். அப்போது குயவநாயக்கன் பட்டியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் சுந்தரமூர்த்தி(51) அடர்ந்த பகுதிக்குள் சென்று யானையை விரட்ட வெடி வைத்துள்ளார்.

elephante

இந்த சத்தம் கேட்டு மிரண்ட ஒற்றை யானை திடீரென வெடிவைத்த சுந்தரமூர்த்தியை நோக்கி வேகமாக ஓடிவந்து முட்டி தள்ளி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு யானையை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in


Next Story
Share it