பெரும் அதிர்ச்சி.. பிளான்போட்டு பிரதமரை கொல்ல முயற்சி.. வெடிகுண்டு தாக்குதலில் தப்பினார் !
பெரும் அதிர்ச்சி.. பிளான்போட்டு பிரதமரை கொல்ல முயற்சி.. வெடிகுண்டு தாக்குதலில் தப்பினார் !

ஈராக் பிரதமரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் பிரதமராக கடந்த ஆண்டு மே மாதம் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்டவர் முஸ்தபா அல் கதிமி. இவர் ஈராக் புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். முந்தைய பிரதமர் மற்றும் அவருடைய அமைச்சரவையை கலைக்கக்கோரி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றதால் அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ஈராக்கில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஈராக் பாராளுமன்றத்தில் ஏற்கனவே பலம் வாய்ந்தவையாக திகழ்ந்த ஈரான் ஆதரவு அரசியல் அமைப்புகள் இந்த தேர்தலில் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஈரான் ஆதரவு அமைப்புகள் தலைநகர் பாக்தாத்தின் உயர் பாதுகாப்புமிக்க பச்சை மண்டலப் பகுதியில் போராட்டத்தில் குதித்தன. அதன்பின்னர் பெரும் வன்முறை ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டக்காரர்கள் பொதுத்தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஈராக் பிரதமர் முஸ்தபா அல் கதிமியை கொலை செய்யும் நோக்கோடு, பாக்தாத்தில் உள்ள அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அல் கதிமி தப்பியுள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இதனை ஈராக் ராணுவமும் உறுதி செய்துள்ளது. மேற்கொண்டு தகவல்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை. ஈராக் பிரதமரை கொலை செய்யும் முயற்சியாக ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. பாக்தாத் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பச்சை மண்டலப் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
newstm.in

