பெரும் அதிர்ச்சி.. இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த 125 பயணிகளுக்கு கொரோனா !!
பெரும் அதிர்ச்சி.. இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த 125 பயணிகளுக்கு கொரோனா !!

இத்தாலியிலிருந்து இந்தியா வந்த 125 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து தனி விமானம் ஒன்று, பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தது. இதில் 179 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 125 பயணியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, ஆபத்துள்ள நாடுகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் இத்தாலி இடம் பெறவில்லை. முதலில் ஏர் இந்தியா விமானத்தில் வந்த 125 பயணியருக்கு கொரோனா என செய்தி வெளியானது. ஆனால், இதை ஏர் இந்தியா நிறுவனம் மறுத்தது.

இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால் அனைத்து விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஒரே விமானத்தில் 125 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சர்வதேச பயணியருக்கு தொற்று உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருவது மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இதற்கிடையில் கோவாவில் இருந்து மும்பை திரும்பிய 'கார்டிலியா' சொகுசு கப்பலில், 100க்கும் மேற்பட்ட பயணியருக்கு தொற்று உறுதியானது. கப்பல் கடலில் நிறுத்தப்பட்டு தொற்று பாதித்த பயணிகள் அங்கேயே தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
newstm.in

