Theme Check

பெரும் அதிர்ச்சி.. 5 மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை !!

பெரும் அதிர்ச்சி.. 5 மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை !!

பெரும் அதிர்ச்சி.. 5 மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை !!
X

ஒரே குடும்பத்தில் தாய், 5 மகள்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சேச்சாட் பகுதியில் சிவ்லால் பஞ்சாரா என்பவர் தனது மனைவி, 5 மகள்களுடன் வசித்து வருகிறார். சிவ்லால் பஞ்சாரா போர்வை, துணிகள் விற்று வரும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அருகில் உள்ள கிராமத்திற்கு தன்னுடைய உறவினர் ஒருவரின் இரங்கல் கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், பஞ்சாராவின் மனைவி பதாம்தேவி (40) தன்னுடை மகள்கள் சாவித்திரி (14), அங்கலி (8), காஜல் (6), குஞ்சன் (4) மற்றும் ஒரு வயதேயான அர்ச்சனா ஆகிய 5 மகள்களுடன் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

kinaru

காலையில் கிணற்றில் சடலங்கள் மிதந்ததை கண்ட கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிராமத்து மக்கள் போலீசாருக்கும் அவரது கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

தாய், 5 குழந்தைகள் தற்கொலை குறித்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் எந்த காரணமும் கூறவில்லை. ஆனால், கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக அப்பெண் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில், காயத்ரி (15), புனம் (7) என்ற அவர்களது இரு மகள்களும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் வகையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் தாய், 5 மகள்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it