Theme Check

பெரும் அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற டிரைவர்கள் !!

பெரும் அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற டிரைவர்கள் !!

பெரும் அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற டிரைவர்கள் !!
X

செல்போன் திருடியதாக இளைஞரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற கொடூர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (28) என்ற இளைஞர், பகுதி நேரமாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்பதற்காக சென்றார்.

அப்போது ஒரு லாரியை நோக்கி இவர் சென்றபோது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை காணவில்லை என சத்தம்போட்டார். உடனே சில டிரைவர்கள் சேர்ந்து கஜேந்திரா ஸ்வைனை பிடித்து, அவர்தான் செல்போனை திருடியதாக கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர். அத்துடன் நிற்காமல் அவருடைய கழுத்தில் காலணி மாலையை அணிவித்தனர். பின்னர் ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் அவரை கட்டி லாரியை ஓட்டிச்சென்றனர். 3 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்ற அவர்கள் பின்னர் அவிழ்த்து விட்டனர்.

lorry

ஒருவேளை கயிறுஅவிழ்ந்து அல்லது அறுந்து அவர் கீழே விழுந்திருந்தால் நிலைமை என்னவேண்டுமானாலும் ஆகியிருக்கும். ஆனால் தனக்கு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி மற்றும் காயம் போன்றவற்றால் அவரால் முடியவில்லை. இதற்கிடையே லாரி டிரைவர்களின் இந்த கொடூர செயலை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்திய லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசாரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.

மேலும் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it