Theme Check

பெரும் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் திருடி போலி தடுப்பூசி மையம் நடத்திய கும்பல் !!

பெரும் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் திருடி போலி தடுப்பூசி மையம் நடத்திய கும்பல் !!

பெரும் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் திருடி போலி தடுப்பூசி மையம் நடத்திய கும்பல் !!
X

கொரோனா தீவிரமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவில் போலி தடுப்பூசி புலக்கத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் போலி தடுப்பூசி மையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தின் ஜாயித்பூர் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக மருத்துவ மையம் நடத்தி வருவது கண்டறியப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடுவதற்காக திறக்கப்பட்ட இந்த திடீர் மையத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக அதேபகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.

vaccine

அதன்படி போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கு கோவிஷீல்டு தடுப்பூசி குப்பிகளும், போலி தடுப்பூசி அட்டைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மையத்தை நடத்தி வந்த பிரிஜேந்திர குமார், சந்தீப் குமார் ஆகிய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதில் சந்தீப் குமார், மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. சந்தீப் குமார், அங்கிருந்து தடுப்பூசிகளை திருடி வந்து இந்த மையத்தில் வைத்து மக்களுக்கு போட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக பயனாளிகளிடம் இருந்து தலா ரூ.125 வசூலித்து வந்துள்ளார்.

vaccine

அவரது இந்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இந்த போலி தடுப்பூசி மையம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it