பெரும் பதற்றம்.. விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தவர் சாலையில் வெட்டிக்கொலை !!
பெரும் பதற்றம்.. விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தவர் சாலையில் வெட்டிக்கொலை !!

சொந்த ஊருக்கு வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் அருகே அலியாதிருத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(34). திருமணம் ஆகாதவர். கோவையில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில், சண்முகம் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.

புரசடை உடைப்பில் உள்ள திறந்தவெளி சிறை எதிரே உள்ள அரசு மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிக்கொண்டு சொந்த ஊரான அறியாதிரும்பள் செல்லும்போது அரசு மதுபான கடைக்கும் காளையார்கோவில் TO பரமக்குடி சாலை இடையில் அவரை மர்ம கும்பல் வழிமறைத்தது. பின்னர் அக்கும்பல் சண்முகத்தை பயங்கர ஆயுதங்களால் வெட்டிபடுகொலை செய்தது. அவரது கழுத்து, தலை, கை, கால் பகுதிகளில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது .
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சண்முகத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

