Theme Check

பெரும் சோகம்.. அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !

பெரும் சோகம்.. அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !

பெரும் சோகம்.. அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !
X

அருணாசல பிரதேசத்தின் பனிச்சரிவில் சிக்கிய வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

army india

இதற்கிடையே, நேற்று முன்தினம் மிக உயர்ந்த மலைப்பகுதியான காமேக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்றது. அவர்களை மீட்கும் பணிக்காக சிறப்பு குழுவினர் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

army india

வீரர்களின் உடல்களுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு இறுதிச்சடங்கிற்காக சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்களின் விவரங்களையும் ராணுவம் வெளியிட்டது.

newstm.in

Tags:
Next Story
Share it