Theme Check

பெரும் சோகம்.. கிணற்றில் விழுந்த ஒட்டுமொத்த கிராம மக்கள்.. பலரை காணவில்லை !!

பெரும் சோகம்.. கிணற்றில் விழுந்த ஒட்டுமொத்த கிராம மக்கள்.. பலரை காணவில்லை !!

பெரும் சோகம்.. கிணற்றில் விழுந்த ஒட்டுமொத்த கிராம மக்கள்.. பலரை காணவில்லை !!
X

குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் குழந்தையை காப்பாற்ற போராடினர். பின்னர் சிறிது நேரத்தில் கிராம மக்கள் அனைவரும் திரண்டு குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இதனால், கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றின் சுற்றுச்சுவரில் இடிந்து விழுந்துள்ளது. ஏராளமானோர் திரண்டு நின்றதால் பாரம் தாங்காமல் இடிந்துவிழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்டதாகவும், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எனினும் கிணற்றுக்குள் 15 பேர் மீட்கப்படாமல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it