பெரும் சோகம்.. கால்பந்து வீரர்கள் மீது குண்டு வீச்சு.. 4 வீரர்கள் உயிரிழந்த அதிர்ச்சி !!
பெரும் சோகம்.. கால்பந்து வீரர்கள் மீது குண்டு வீச்சு.. 4 வீரர்கள் உயிரிழந்த அதிர்ச்சி !!

கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 வீரர்கள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
சோமாலியா நாட்டில் கிஸ்மாயோ நகரில் கால்பந்து வீரர்களுடன் வாகனம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் மறைந்திருந்த கும்பல் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசியது. இதில் 5 பேர் பலியானார்கள். 25 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அதாவது, புதிதாக ஊக்குவிக்கப்பட்ட சோமாலியா பிரீமியர் லீக் கிளப்பான ஜேசிசிஐ எஃப்சி 20 வீரர்களை வாகனத்தில் அழைத்துச்சென்றப்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது.
குண்டுவெடிப்பு மிகப்பெரியது மற்றும் பேரழிவை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர் பேருந்தில் எரிந்த நிலையில் இருந்த உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் கால்பந்து வீரர்கள் என கூறுகின்றனர்.
பேருந்து மீது குண்டு வீசியதாக கூறப்பட்டாலும் முன்னதாகவே வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் முகமது அப்துல்லாஹி முகமது , குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அல் கொய்தாவுடன் தொடர்பில் இருக்கும் அல் ஷபாப் அமைப்பே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
newstm.in

