Theme Check

பெரும் சோகம்.. சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து: 45 பயணிகள் பலி

பெரும் சோகம்.. சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து: 45 பயணிகள் பலி

பெரும் சோகம்.. சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து: 45 பயணிகள் பலி
X

ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் பலியான சம்பவம் சர்வதேச அளவில் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

பல்கேரியாவில் பயணிகள் பேருந்தானது துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 2 மணியளவில் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததாகத் தெரிகிறது.

bulgaria bus fire

சூழலை உணர்வதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்த நிலையில் பயணிகள் 12 குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் தீப்பிடித்த பேருந்தில் சிக்கியவர்களில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டு சோபியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பேருந்து விபத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தி உள்ளது.

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பெருமளவிலானோர் வடக்கு மேசிடோனியா நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசிகள் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு வடக்கு மேசிடோனியா பிரதமர் ஜோரன் ஜாயேவ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

bulgaria bus fire

இதனிடையே, தீப்பிடித்ததன் காரணமாக பேருந்து தடுப்புகளில் மோதியதா அல்லது தடுப்புகளில் மோதியதால் தீ பிடித்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it