Theme Check

பெரும் சோகம்.. பாடியபோதே பிரிந்த உயிர்.. சரிந்து விழுந்த பின்னணிப் பாடகர்..!

பெரும் சோகம்.. பாடியபோதே பிரிந்த உயிர்.. சரிந்து விழுந்த பின்னணிப் பாடகர்..!

பெரும் சோகம்.. பாடியபோதே பிரிந்த உயிர்.. சரிந்து விழுந்த பின்னணிப் பாடகர்..!
X

கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர், மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் எடவா பகுதியைச் சேர்ந்தவர் எடவா பஷீர். பிரபல பின்னணி பாடகரான இவர் இந்தியாவில் பல மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இசைக்குழு மூலம் சக்சேரி நடத்தி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
Edava Basheer: Singer who collapsed on stage while singing a song .. died  of a heart attack .. | Veteran singer edava basheer collapses on stage  during live concert dies funeral - filmyzoo - Hindisip
இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் நேற்று முன் தினம் ப்ளூ டைமண்ட் இசைக்குழுவின் சார்பில் கச்சேரி நடந்தது. அப்போது பஷீர் மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென சரிந்து கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இசைக் குழுவினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

எடவா பஷீரின் உயிர் பிரிந்த கடைசி நிமிட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர், திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
Share it