பெரும் சோகம்.. காருடன் குட்டையில் மூழ்கி மூச்சுத்திணறி பிரபல நடிகை உயிரிழப்பு !!

பெரும் சோகம்.. காருடன் குட்டையில் மூழ்கி மூச்சுத்திணறி பிரபல நடிகை உயிரிழப்பு !!

பெரும் சோகம்.. காருடன் குட்டையில் மூழ்கி மூச்சுத்திணறி பிரபல நடிகை உயிரிழப்பு !!
X

மராத்தி மற்றும் இந்தி திரையுலகில் வளர்ந்து வந்தவர் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே. படப்பிடிப்புகளில் பிசியாக இருந்த அவர் சில நாட்கள் ஓய்வில் இருந்துள்ளார். அதேநேரம் இவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன.

actress ishwari deshpande

25 வயதான நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சுப்பம் டெட்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டியதைடுத்து திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் அதற்கு முன்பாக காதலர்களாக நீண்டகாலம் இருக்க அவர்கள் முடிவெடுத்து காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது சுற்றுலா நாட்களை கழிப்பதற்காக காரிலேயே கோவா சென்றுள்ளனர். அங்கு பொழுதை கழித்த இருவரும் அதேகாரில் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா என்ற பகுதியில் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.

actress ishwari deshpande

அவ்வாறு கட்டுப்பாட்டை இழந்ததில் கார் விபத்திற்குள்ளானது. மேலும் உருண்டு ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் விழுந்தது. அதில் அதிகளவு தண்ணீரில் இருந்ததால் காரினுள்ளே மூச்சு திணறி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலன் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் பாலிவுட் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மறைவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் சோகத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it