பெரும் சோகம்.. பிரபல பத்திரிகையாளர் புற்றுநோயால் மரணம் !!
பெரும் சோகம்.. பிரபல பத்திரிகையாளர் புற்றுநோயால் மரணம் !!

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிகையாளர் ரவிஷ் திவாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானில் வசித்து வந்தவர் ரவிஷ் திவாரி. 40 வயதான இவர், ஆங்கில நாளிதழ் ஒன்றின் தேசிய அரசியல் பிரிவுக்கான ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பத்திரிகை துறையில் திறம்பட பணியாற்றி பலரின் பாராட்டை பெற்றவர். மேலும் ஏராளமான இளம் பத்திரிகையாளர்களுக்கும் ஒரு உந்துதலாக இருந்தார்.

இந்த நிலையில், ரவிஷ் திவாரி கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றும் வந்தார். இந்த நிலையில், ரவிஷ் திவாரி, புற்றுநோய் பாதிப்பால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு மனைவி, பெற்றோர் உள்ளனர். பத்திரிகையாளர் ரவிஷ் திவாரி உயிரிழப்புக்கு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

