Theme Check

பெரும் சோகம்.. லாரி மோதியதில் குழந்தையுடன் உயிரிழந்த பெண் காவலர் !!

பெரும் சோகம்.. லாரி மோதியதில் குழந்தையுடன் உயிரிழந்த பெண் காவலர் !!

பெரும் சோகம்.. லாரி மோதியதில் குழந்தையுடன் உயிரிழந்த பெண் காவலர் !!
X

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் காவலர், தனது குழந்தையுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் உமாதேவி(26) என்ற பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த உமாதேவி நேற்றிரவு பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு கணவர் ராஜா மற்றும் மகன் தக்ஷூத்-வுடன் சென்றுள்ளார்.

சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பார்த்திராத அந்த சோகம் நடந்துள்ளது. பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று இரண்டு கார்களை மோதி முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பைக் தூக்கி வீசப்பட்டதில் காவலர் உமாதேவி மற்றும் அவரது இரண்டு வயது மகன் தக்ஷூத் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

Kanchipuram-police

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த பெண் காவலரின் கணவர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி காவல்துறையினர் லாரியை கைபற்றி தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் பெண் காவலரும் அவரது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Next Story
Share it