Theme Check

பெரும் சோகம்.. கானா பாடகர் சுடரொளி சாலை விபத்தில் மரணம் !!

பெரும் சோகம்.. கானா பாடகர் சுடரொளி சாலை விபத்தில் மரணம் !!

பெரும் சோகம்.. கானா பாடகர் சுடரொளி சாலை விபத்தில் மரணம் !!
X

சென்னையை அடுத்த பம்மல் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சுடரொளி (21). கானா பாடகரான இவர் பல்வேறு கானா பாடல்களை பாடி பிரபலமானார். இந்த நிலையில், கானா பாடகர் சுடரொளி தனது நண்பர்களுடன் நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கானா பாடல்களை பாடிவிட்டு பின்னர் பம்மலில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து பம்மலுக்கு புறப்பட்ட சுடரொளி, பரங்கிமலை சிமெண்ட் ரோடு சிக்னல் அருகே வந்த கொண்டிருந்தார். அப்போது சாலையில் பக்கவாட்டில் சென்ற கார் மீது சுடரொளி சென்ற இருசக்கர வாகனம் உரசியதாக கூறப்படுகிறது.

death

இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கியது. இதில், பேருந்து சக்கரத்தில் விழுந்ததில் கானா பாடகர் சுடரொளி பலத்த காயமடைந்தார். அவருடன் மற்ற இருசக்கர வாகனத்தில் வந்த அவரது நண்பர்கள் விபத்தில் படுகாயமடைந்த சுடரொளியை மீட்டு உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சுடரொளி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்து சம்பவம் குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கானா பாடகர் சுடரொலி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள், சக பாடகர்கள், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it