Theme Check

பெரும் சோகம்.. வீட்டின் மீது மரம் விழுந்து பெண் குழந்தை பலி! !!

பெரும் சோகம்.. வீட்டின் மீது மரம் விழுந்து பெண் குழந்தை பலி! !!

பெரும் சோகம்.. வீட்டின் மீது மரம் விழுந்து பெண் குழந்தை பலி! !!
X

திருப்பத்தூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஏற்கனவே சில நாட்களாக மழை பெய்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் செத்தமலை பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணாபாலு (35), அவருடைய மனைவி சத்யா (27) இவருடைய மகள் தேவிகா (6) மற்றும் கவின் (2) குழந்தைகள் என நான்கு பேரும் நேற்று இரவு வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

இரவு பெய்த கனமழையின் காரணமாக, 2 மணி அளவில் வீட்டின் அருகே இருந்த வேப்ப மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மனைவி சத்யா, 2ஆவது குழந்தை கவினை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மரக்கிளையின் இடுக்கில் மாட்டி கொண்ட கிருஷ்ணாபாலுக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

rain

ஆனால் தேவிகா 6 வயது குழந்தை வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு சென்று பார்த்தப்போது அக்குழுழந்தை சம்பவஇடத்திலேயே பலியானது. இச்சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Next Story
Share it