Theme Check

பெரும் சோகம்.. புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை !!

பெரும் சோகம்.. புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை !!

பெரும் சோகம்.. புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை !!
X

மது போதையில் புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அருகே சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (37). மீன்பிடி தொழில் செய்து வந்த இவருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகின்றன. இந்தநிலையில் நேற்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ராஜா என்பவரது வீட்டில் மது அருந்தி உள்ளார். அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கு ஏறிய நிலையில் பேச்சின் நிலை மாறியது.

இதனால் அப்போது ராஜா மற்றும் கவாஸ்கருக்கு இடையே மது போதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. மற்ற நண்பர்கள் சமாதானம் செய்ய முயன்றும் பிரச்சனை முற்றியது. பின்னர் சிறிது நேரத்தில் தகராறு கைகலப்பாக மாற ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கவாஸ்கர் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் அங்கிருந்த நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
kathikuthu
இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கவாஸ்கரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருமணமான மூன்றே மாதத்தில் வாலிபர் கொலையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it