Theme Check

பெரும் சோகம்.. பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் விபத்தில் உயிரிழப்பு !!

பெரும் சோகம்.. பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் விபத்தில் உயிரிழப்பு !!

பெரும் சோகம்.. பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் விபத்தில் உயிரிழப்பு !!
X

தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால் நேற்று சென்னை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். சொந்த ஊரில் பொங்கலை கொண்டாட பேருந்து, ரயில்கள், தனிக்கார்கள், வாடகை கார்களில் மக்கள் சென்றதை காணமுடிந்தது.

death

ஆனால், இப்படி சொந்த ஊருக்கு சென்ற இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கார் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திருச்சியை சேர்ந்த குமார் மற்றும் வெங்கடவரதன் என்பது தெரியவந்துள்ளது.

s

இவர்கள் இருவரும் காரில் பொங்கல் பண்டிக்கைக்காக சொந்த ஊருக்கு காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், விபத்துக்குள்ளான லாரியும் தீக்கிரையாகியுள்ளது. எனினும் ஓட்டுநருக்கு பாதிப்பு இல்லையென கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Next Story
Share it