பெரும் சோகம்.. செங்கோட்டை திரைப்பட பிரபலம் திடீர் மரணம் !!
பெரும் சோகம்.. செங்கோட்டை திரைப்பட பிரபலம் திடீர் மரணம் !!

அர்ஜுன், ரம்பா, மீனா, விஜயகுமார், ராசன் பி.தேவ், வடிவேலு, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செங்கோட்டை. வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தேசிய உணர்வை போற்றும் விதமாக உருவாகியிருந்த இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் சி. வி. சசிகுமார்.

இப்படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இயக்குநர் சசிகுமமார், செங்கோட்டை படத்தைத் தவிர்த்து சன் டி.வி.யில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சின்னத்திரையிலும் கால்பதித்து அதில் வெற்றிக்கண்டவர். இந்த நிலையில் செங்கோட்டை படத்தை இயக்கியிருந்த இயக்குநர் சி.வி.சசிகுமார் இன்று உயிரிழந்தார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். எனினும் உடல் நலத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் இயக்குநர் சசிகுமார் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
newstm.in

