Theme Check

பெரும் சோகம்.. பைக்கில் சென்ற சிறுமி மரணம் !!

பெரும் சோகம்.. பைக்கில் சென்ற சிறுமி மரணம் !!

பெரும் சோகம்.. பைக்கில் சென்ற சிறுமி மரணம் !!
X

உத்தமர்கோவில் அருகே நடைபெற்ற சகோதரனுடன் பைக்கிள் சென்ற பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காசிக்கடை பகுதியைசு சேர்ந்த முருகேசன், இவரது மகள் ஸ்ரீவேதநாயகி (15) சமயபுரம் அருகே உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அவருக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாணவி ஸ்ரீவேதநாயகி தனது சகோதரர் கரன் என்பவருடன் பைக்கில் பள்ளிக்கு சென்றுள்ளார். இருவரும் உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியதில் ஸ்ரீவேதநாயகி படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ZD

அங்கு சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சகோதரனுடன் பைக்கில் சென்ற பள்ளி மாணவி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

newstm.in

Next Story
Share it