Theme Check

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு க்ரீன் சிக்னல்.. படத்தையும், கொடியையும் பயன்படுத்தலாம்..!

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு க்ரீன் சிக்னல்.. படத்தையும், கொடியையும் பயன்படுத்தலாம்..!

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு க்ரீன் சிக்னல்.. படத்தையும், கொடியையும் பயன்படுத்தலாம்..!
X

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட இருப்பதாக இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர அவருடைய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்டு 2 ஊராட்சி தலைவர்கள், 15 ஊராட்சி மன்ற துணைத் தலைவர் என மொத்தம் 129 இடங்களை கைப்பற்றினர்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்தியதோடு, மக்கள் பணியை சிறப்பாக செய்யும்படி அறிவுரையும் வழங்கினார்.

இந்நிலையில், “தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது.
தேர்தலில் வென்றவர்களை தனித்தனியாக அழைத்து விஜய் பேசியது என்ன? - புஸ்ஸி  ஆனந்த் பேட்டி | Pussy Anand tells about the orders given by actor Vijay to  the winners of the local elections ...
இதற்கான பிரச்சாரத்தில் நடிகர் விஜய் புகைப்படத்தையும், இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்” என, அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it