Theme Check

பசுமை தமிழ்நாடு திட்டம்.. அரசுக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு..!

பசுமை தமிழ்நாடு திட்டம்.. அரசுக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு..!

பசுமை தமிழ்நாடு திட்டம்.. அரசுக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு..!
X

தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தைத் தொடங்கி, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியிருப்பதாவது: “காவேரி கூக்குரல் இயக்கம் பசுமை தமிழ்நாடு திட்டத்துக்கு தனது மனமார்ந்த ஆதரவை தெரிவித்து கொள்கிறது. இத்திட்டம் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கும், மாநிலத்தில் செழிப்பையும், நல்வாழ்வையும் அதிகரிப்பதற்கும் மிகவும் அவசியம்.

பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, அடுத்த 2 ஆண்டுகளில் 1.77 கோடி மரக்கன்றுகளை உருவாக்க ரூ.38.80 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதேபோன்ற நோக்கத்துடன்தான் காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு, கா்நாடகத்தில் காவிரி படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கத்தை விரைந்து செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தை அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it