Theme Check

'திருமணம் செய்யலாமா'- ஒரு வார்த்தையை கூறி 100 பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த மாப்பிள்ளை கைது !

'திருமணம் செய்யலாமா'- ஒரு வார்த்தையை கூறி 100 பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த மாப்பிள்ளை கைது !

திருமணம் செய்யலாமா- ஒரு வார்த்தையை கூறி 100 பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த மாப்பிள்ளை கைது !
X

நவீன மயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் அதற்கு முக்கியமான தகவல் தொழில்நுட்பம் முலமே குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த இளைஞரின் மோசடி, பாலியல் தொல்லை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த பிரேம்ராஜ் தேவ்ராஜ் டிகுரூஸ் என்பவர் திருமண வெப்சைட்டில் பெண் தேடி விண்ணப்பித்துள்ளார். மேலும் அந்த வெப்சைட் மூலம் புனேவில் வசிக்கும் பெண் ஒருவரை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக பேசியுள்ளார். தொடக்கத்தில் தயங்கி அப்பெண் சிறிது நாளில், திருமணம் செய்துகொள்ளப் போகும் நபர்தானே என்ற எண்ணத்தில் பேசியுள்ளார். பின்னர் இருவரும் நெருங்கி பழகியுள்ளார்.

girl

இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த பிரேம்ராஜ் அப்பெண்ணிடம் ஆசையாக பேசி ரூ.11 லட்சம் வரை வாங்கியுள்ளார். ஆனால், அப்பெண் திருமணம் செய்ய கூறியும் அதற்கு காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், பிரேம்ராஜ் சென்னையில் இருந்ததால், அவரை அப்பெண் மூலமாக பிம்ப்ரிக்கு புனே போலீசார் வரவழைத்தனர். பிம்ப்ரி வந்த பிரேம்ராஜை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கைதான பிரேம்ராஜ் திருமண வலைதளம் மூலமாக புனே, தானே, மலாடு, மும்பை, தமிழ்நாடு, சென்னை, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு திருமண ஆசை காட்டி, கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

girl

தன்னை ஒரு கான்ட்ராக்டர், பில்டர், தொழில் அதிபர் என்று அறிமுகம் செய்து அதற்கேற்றவாறு பேசி பெண்களை ஏமாற்றியுள்ளார். இதில், இளம்பெண்கள், விதவை பெண்கள் உள்ளிட்டோர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. பல பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை. சிலர் பல காவல் நிலையங்களில் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it