குவா... குவா...! அம்மாவானார் சூர்யா பட பிரபல நடிகை!!
குவா... குவா...! அம்மாவானார் சூர்யா பட பிரபல நடிகை!!

மாஸ், சகுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ப்ரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அருள்நிதி நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான உதயன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ப்ரணிதா. அதன்பின்னர் கார்த்திக்கு ஜோடியாக சகுனி படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
முன்னணி நடிகர்களுடன் நடித்த பின்னரும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் ப்ரணிதா பிற மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்தாண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.

இந்நிலையில் நடிகை ப்ரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
newstm.in

