Theme Check

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர் - பதறிய சக ஊழியர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் யோகஸ்வரன் என்ற ஆயுதப்படை காவலர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வங்கிக்கு வந்த யோகேஸ்வரன் பணம் வைக்கும் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. மற்றொரு சாவியை எடுத்து திறந்து பார்த்த போது ஊழியர்கள் ஆடிப்போயினர்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர் - பதறிய சக ஊழியர்கள்
X

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் யோகஸ்வரன் என்ற ஆயுதப்படை காவலர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வங்கிக்கு வந்த யோகேஸ்வரன் பணம் வைக்கும் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதனையடுத்து வங்கியில் இருந்த மற்றொரு சாவியை எடுத்து திறந்து பார்த்த போது வங்கி ஊழியர்கள் ஒருகணம் அதிர்ச்சியில் ஆடிப்போயினர்.


உள்ளே யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கழுத்துப்பகுதியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வங்கி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காவலர் யோகேஸ்வரன் இறந்துகிடந்த அறையை பார்வையிட்டு பின்னர் விசாரணை நடத்தினர்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர் - பதறிய சக ஊழியர்கள்
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், குடும்ப பிரச்னையா, தனிப்பட்ட பிரச்னையா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு பணிச்சுமை காரணமாக என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it