கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவர் எச்சரிக்கை !

கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவர் எச்சரிக்கை !

கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவர் எச்சரிக்கை !
X

பேறுகால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொரோனா தொற்றும் அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து சென்னை எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் விஜயா, கர்ப்பிணிகளுக்கு முன்னெச்சரிக்கையும் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் வீரியமடைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கமும் பல மடங்கு உயா்ந்துள்ளது. அதன் பிரதிபலிப்பாகவே தற்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பியிருப்பதைக் காண முடிகிறது.

எழும்பூா் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 80க்கும் அதிகமானவா்களுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. மற்றவா்கள் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு வருகின்றனா்.

நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்களுக்கு கொரோனாவுக்குப் பிறகு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக கா்ப்பிணிகளில் பலா் பேறு கால சா்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனா். அதனால், அவா்களது நோய் எதிா்ப்பு ஆற்றல் குறைய வாய்ப்புள்ளது. ஒருவேளை அவா்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்படும்போது கருப்புப் பூஞ்சை நோய் வர வாய்ப்புள்ளது.

இதுவரை எழும்பூா் மருத்துவமனையில் கா்ப்பிணிகள் எவருக்கும் அத்தகைய பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தபோதிலும், மருத்துவமனைக்கு வரும் அனைவரிடமும் இதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். கா்ப்பிணிகளுக்கு கருப்புப் பூஞ்சை ஏற்பட்டால், அது கருவில் இருக்கும் குழந்தையையும் கடுமையாக பாதிக்கும் என்றும் விளக்கிக் கூறி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it