கேரள கவர்னராகிறார் எச். ராஜா..?: டில்லி செல்கிறார் தமிழக கவர்னர்..!
கேரள கவர்னராகிறார் எச். ராஜா..?: டில்லி செல்கிறார் தமிழக கவர்னர்..!

பாஜக தேசிய செயலாளராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த எச்.ராஜா (64), கேரள கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் கவர்னராக உள்ளார். மற்றொரு மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக உள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா இருவரையும் பாஜக தலைமை சமீபத்தில் அழைத்து பேச்சு நடத்தியது.
இதையடுத்து, இவர்களில் ஒருவருக்கு கேரள கவர்னராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில், எச்.ராஜா முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கேரள கவர்னராக உள்ள ஆரிப் முகமது கான் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, தமிழக கவர்னர் ரவி இன்று டெல்லி செல்கிறார். அங்கு, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவர் சந்திக்கிறார்.

