Theme Check

பாதி பேர் சிறைக்கு செல்வார்கள் - அண்ணாமலை..!

பாதி பேர் சிறைக்கு செல்வார்கள் - அண்ணாமலை..!

பாதி பேர் சிறைக்கு செல்வார்கள் - அண்ணாமலை..!
X

சென்னை பாஜக அலுவலகத்தில், கட்சியின் மாநில மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

“இரண்டு மாநிலங்களை ஆளும் ஆளுநரை (தமிழிசை செளந்தர்ராஜன்), அதுவும் ஒரு பெண்ணை மிகவும் தரக்குறைவாக பேசிய நாஞ்சில் சம்பத்துக்கு தமிழக மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். கருத்தியல் ரீதியாக திமுகவினரால் பேச முடியவில்லை என்பதால் இப்படி பேசி வருகிறார்கள்.

திமுகவினர் என்னுடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டாலும் ஒன்றும் கிடைக்காது. நான், 7 மணி நேரமாக காவல்துறைக்காக காத்திருந்தேன்.

ஆனால், அவர்கள் வரவில்லை. என் மீது நடவடிக்கை எடுக்க ஒரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை. நேரம் வரும்போது சிறை செல்வேன் என்கிறார்கள்.

ஆனால், திமுகவில் அதிகப்படியான கரும்புள்ளிகளை வைத்துக் கொண்டு அவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என எல்லோரும் அடங்குவர்.

அப்படி இருக்கும் பட்சத்தில், அவர்களில் பாதி பேர் சிறைக்கு செல்வார்கள். கடந்த வாரம் கூட திமுக அமைச்சர் ஒருவருக்கு, அமலாக்கத்துறை சம்மன் கொடுத்துள்ளது. அவர், 2 வார கால அவகாசம் கேட்டுள்ளார்” என அண்ணாமலை கூறினார்.

Next Story
Share it