Theme Check

மாணவிகளுக்கு கை, கால், பார்வை பாதிப்பு! கொரோனா தடுப்பூசி காரணமா?

மாணவிகளுக்கு கை, கால், பார்வை பாதிப்பு! கொரோனா தடுப்பூசி காரணமா?

மாணவிகளுக்கு கை, கால், பார்வை பாதிப்பு! கொரோனா தடுப்பூசி காரணமா?
X

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டதால் மாணவிகள் இரண்டு பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எள்ளுபாறை பகுதியை சேர்ந்த யோகலட்சுமி, சோளிங்கரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி 4ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்படி பள்ளியில் யோகலட்சுமிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற யோகலட்சுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யோகலட்சுமிக்கு திடீரென பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.

covid_vaccine

இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் உதவி இயக்குனர் மணிமாறனிடம் கேட்டபோது, பள்ளி மாணவிக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் கண் பார்வை போக வாய்ப்பில்லை என்றார். பெற்றோரின் வம்சாவளி மரபணு மாற்றத்தின் காரணமாக கண் பார்வைத்திறன் இழந்திருக்கலாம் என சான்று வழங்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

அதனடிப்படையில் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல கண் பிரிவு மருத்துவமனைக்கு மாணவியை சிகிச்சைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார். இதனிடையே அதே பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவி பிரியதர்ஷினி இரண்டு கால்களும் செயலிழந்து எழுந்து நிற்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

covid_vaccine

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மாணவி பிரியதர்ஷினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகள் யோகலட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் பாதிப்பு ஏற்பட்டதா என மருத்துவர்கள் குழு அளிக்கும்அறிக்கை மூலம் தெரிய வரும் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it