பேருந்தில் பயணிப்போருக்கு ஹேப்பி நியூஸ்!!
பேருந்தில் பயணிப்போருக்கு ஹேப்பி நியூஸ்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உணவகத்தில் பேருந்தை நிறுத்த பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
விரைவு பேருந்துகளில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் போது சாலையோரம் இருக்கும் உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்படும் பேருந்துகளுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்.
கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும்.

பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.
உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்.
பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.
உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.

உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் எம்.ஆர்.பி (MRP) விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.
உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்.
மேலும் உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நிபந்தனைகள் விதித்துள்ளது.
newstm.in

