Theme Check

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மீண்டும் ஆன்லைனில் தேர்வு..!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மீண்டும் ஆன்லைனில் தேர்வு..!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மீண்டும் ஆன்லைனில் தேர்வு..!
X

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (19ம் தேதி) முதல் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இணைய வழியில் அந்தந்தப் பாடங்களுக்கான அலகுத் தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

‘அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நேரடியாக தேர்வுகள் நடத்த முடியாத நிலை உள்ளது. இருப்பினும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி உள்ளனர். எனவே, அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் மூலமாக ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி வினாத்தாள் தயார் செய்து மாணவர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி, மாணவர்களை வீட்டில் இருந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய பின் வினாத்தாளை மாணவர்கள் மீண்டும் வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வர். இதனால் மாணவர்களுக்கு தேர்வு எழுதிய அனுபவம் கிடைக்கும்’ என, பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it