Theme Check

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பேரவையில் அறிவித்தார் பொன்முடி..!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பேரவையில் அறிவித்தார் பொன்முடி..!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பேரவையில் அறிவித்தார் பொன்முடி..!
X

தமிழக சட்டப்பேரவையில் இன்று (11-ம் தேதி), பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “வரும் கல்வியாண்டில் மேலும் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மாநில அளவில் சென்னை அறிவியல் விழா நடத்தப்படும். அதன் அங்கமாக அறிவியல் கண்காட்சி, குழு விவாதங்கள், பிரபல அறிவுரைகள், அறிவியல் செயல்முறை சோதனைகள் மற்றும் அறிவியலில் பொழுதுபோக்கு அம்சமாக பொம்மலாட்டம் ஆகியவைகளும் நடத்தப்பட உள்ளன.

மாணவர்களிடையே ஆய்வு மனப்பான்மையை உருவாக்கி ஊக்குவிக்கும் விதமாக தமிழக அளவில் கணிதவியல், வேதியியல் மற்றும் உயிரியல் துறைகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.

இதற்கு, 75% ஊரகம், 25% நகர்புறங்களில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 21 நாட்கள் முகாம்கள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it