தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 5 நாட்கள் தொடர் விடுமுறை..!
தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 5 நாட்கள் தொடர் விடுமுறை..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தை மாதம் முதல் நாள் அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகையும் கொண்டாடப்படும்.
இப்பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். இதனால், வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர்.
மற்ற ஆண்டுகளை போலவே 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. மக்கள் பண்டிகைக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வருகிற 13-ந் தேதி போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல், 15-ந்தேதி மாட்டுப்பொங்கல், 16-ந்தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து வருகிற 14-ந்தேதி முதல் தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்படுகிறது.வருகிற 17, 18-ந் தேதிகளில் பஞ்சு, நூல் விலையை கண்டித்து பனியன் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அனைத்து தொழில் அமைப்புகளும் உற்பத்தி நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பொங்கல் விடுமுறையை தொடர்ந்து உற்பத்தி நிறுத்தம் காரணமாக தொழி லாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. வருகிற 19-ந்தேதி முதல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்க உள்ளன.

