ஹேப்பி நியூஸ்... தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்தது...
ஹேப்பி நியூஸ்... தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்தது...

நம் வீட்டு பெண்கள் அனைவர்க்கும் ஒரு விஷயம் பிடிக்கும்னா அது தங்கம் வாங்குறது தான்.ஏனென்றால் தங்கம் என்பது இங்கு வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்கப்படுவது இல்லை சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் நகை வாங்குவது இந்தியர்களின் வாடிக்கை.
கால் பவுன் தங்கமாவது வருடம் ஒருமுறை வாங்க வேண்டும் என்பதே இந்திய நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு திட்டம். தங்கம் இல்லாத இந்திய குடும்ப விசேஷங்கள் நிறைவு பெறாது.குருவி சேமிப்பது போல் சிறுக சிறுக சேமித்து, தங்கம் வாங்குவதில் குறியாக இருப்பவர்கள் நம் வீட்டு இல்லத்தரசிகள் என்று கூட சொல்லலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சியை குடுத்தது அதன் விலை. ஒரு சவரன் நகை 43,000 மேல் விற்பனையானது தான் அதன் காரணம். ஆனால் சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது மக்களிடையே சந்தோசத்தை உருவாகியுள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,448-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 70,400 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து ரூ.69,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
05 MAR 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,448-க்கு விற்பனை
04 MAR 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,736-க்கு விற்பனை
03 MAR 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,112-க்கு விற்பனை
02 MAR 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,288-க்கு விற்பனை
01 MAR 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,736-க்கு விற்பனை

