ஹேப்பி நியூஸ் மக்களே..!! மூன்று நாட்களில் 832 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை..!!
ஹேப்பி நியூஸ் மக்களே..!! மூன்று நாட்களில் 832 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை..!!

கடந்த சில மாதங்களாக கடுமையாக அதிகரித்துவந்த வந்த தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வருவது மக்களிடையே சந்தோஷத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய உலகில் தங்கம் ஒரு விலைமதிப்பற்ற உலோகம் மட்டுமல்ல, முதலீட்டு வடிவமும் கூட.பலர் தங்கத்தை சொந்த உபயோகத்திற்காக மட்டும் வாங்காமல், அதை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தவும், தங்களுடைய மகள்களுக்காகவும் சேமித்து வைக்கின்றனர்.அப்படிப்பட்ட தங்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இனி நாம் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போலே என சொல்லி கொண்டிருந்த வேளையில் கடந்த 3 நாட்களாக அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை.
ஜனவரி 26 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,096 ஆக இருந்த விலை தற்போது 36,264 ஆக குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 832 ரூபாய் குறைந்துள்ளது
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,264-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, ரூ.4,533-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.65,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.