காதலர் தினம் கொண்டாட தடை!! இந்த நாடு எப்பவுமே இப்படித் தானா?
பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் வாகீத் என்ற நபர், காதலர் தினக் கொண்டாட்டங்களை பாகிஸ்தானில் தடை செய்ய வேண்டும் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் வாகீத் என்ற நபர், காதலர் தினக் கொண்டாட்டங்களை பாகிஸ்தானில் தடை செய்ய வேண்டும் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று நடந்த விசாரணையில், இஸ்லாமியக் கலாச்சாரத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இடம் பெறவில்லை, எனவே பாகிஸ்தான் முழுவதும் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு மீது அவசரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பாகிஸ்தானில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
newstm.in
Tags:
Next Story

