Theme Check

உலக தமிழர் தின வாழ்த்துகள்! கவிதை எழுதுறவங்க கமெண்ட் பண்ணுங்க!!

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்’ என்ற பாரதியே...! நீ பிடித்த தேர்வடத்தை ஊழல் கரையான்கள் அரித்து விட்டது!

உலக தமிழர் தின வாழ்த்துகள்! கவிதை எழுதுறவங்க கமெண்ட் பண்ணுங்க!!
X

‘யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்’
என்ற பாரதியே...!

நீ பிடித்த தேர்வடத்தை
ஊழல் கரையான்கள்
அரித்து விட்டது!

தேரின் உச்சியில்
மதக் கரையான்கள்
ரத்தம் குடித்துக் கொண்டிருக்கின்றன!

எங்கள் தமிழ் பெண்களின்
தங்க நகைகள்
அடகு கடைகளில்
இந்தி கற்றுக் கொண்டிருக்கின்றன!

விவசாயிகள் முதுகெலும்பென்பதால்
அவர்களை நாங்கள்
எப்பொழுதுமே திரும்பிப் பார்ப்பதில்லை!

சிங்களத் தீவிற்கோர்
பாலம் அமைக்க சொன்னாய்...
சிங்களவன் கொன்ற
தமிழர்களின் பிணங்களைக் கொண்டு
பாலம் அமைத்து
இன்று உரக்கச் சொல்கிறோம்
உலக தமிழர் தின வாழ்த்துக்கள்!

newstm.in

Tags:
Next Story
Share it