Theme Check

மாடலிங் பெண்ணுக்கு செல்போன் எண்ணை மாற்றி மாற்றி தொல்லை.. இளைஞரின் பகீர் பின்னணி !!

மாடலிங் பெண்ணுக்கு செல்போன் எண்ணை மாற்றி மாற்றி தொல்லை.. இளைஞரின் பகீர் பின்னணி !!

மாடலிங் பெண்ணுக்கு செல்போன் எண்ணை மாற்றி மாற்றி தொல்லை.. இளைஞரின் பகீர் பின்னணி !!
X

இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர் சிக்கியுள்ளார்.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இதனால் அத்துறையில் இவருக்கு பலரும் அறிமுகம் ஆகினர். அந்த வகையில் ரஞ்சித் என்பவர் செல்போன் வாயிலாக இளம்பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். தான் ஒரு Event manager எனக்கூறி தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு, அந்தப்பெண்ணிடம் நட்பாக பேசி பழகி வந்துள்ளார். அதோடு தனக்கு சினிமாவில் அதிக பழக்கம் இருப்பதால் நடிக்க வைப்பதாக கூறியும் அப்பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

cell

ஆனால், ரஞ்சித் தவறான நோக்கத்துடன் அணுகுவதை அறிந்த அப்பெண் பேசுவதை தவிர்த்துள்ளார். ரஞ்சித் பலமுறை முயற்சித்தும் அவரது அழைப்பை அந்தப்பெண் எடுக்கவில்லை. இதற்கிடையில் தீக்‌ஷ் குப்தா என்ற பெண் போன்று வாட்ஸ்அப் மூலம் அந்தப்பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். தானும் மாடலிங் துறையில் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை கேட்டு பெற்றுள்ளார்.

cell

அந்தப்பெண்ணும் ஒரே துறையில் தானே இருக்கிறோம் என்று நம்பி இவருடைய புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இந்நிலையில் இவர் அனுப்பிய புகைப்படங்கள் எல்லாம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு அவரது மொபைல் போனுக்கு வந்துள்ளது. இதனைக்கண்டு அந்தப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தீக்‌ஷ்குப்தா என்ற பெயரில் ரஞ்சித் தான் வேறொரு தொலைப்பேசி எண் மூலம் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் அந்தப்பெண்ணை தொடர்புக்கொண்ட ரஞ்சித் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையென்றால் இந்தப்புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

cell

இதனையடுத்து அந்தப்பெண் தரப்பில் கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த ரஞ்சித் (26) என்ற இளைஞரை கைது செய்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ரஞ்சித் சென்னை பெரும்பாக்கம் பகுதியில் தங்கி Event Manager தொழில் செய்து வந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் ரஞ்சித்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it