Theme Check

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் ஹர்பஜன் சிங்.. தக்கவைக்க போராடும் IPL அணி !

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் ஹர்பஜன் சிங்.. தக்கவைக்க போராடும் IPL அணி !

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் ஹர்பஜன் சிங்.. தக்கவைக்க போராடும் IPL அணி !
X

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சில் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் விளங்கிய இவர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் பெரும் தாக்கத்தை கொண்டு வந்தவர். அதிரடி வீரர்களையே தனது சுழற்பந்துவீச்சில் சுருட்டியவர் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் இந்திய அணிக்காக கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகமானனார். இதுவரை டெஸ்டில் 417 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

பந்துவீச்சில் அசத்தினாலும் யாரும் எதிர்பாராத நேரத்தில் பேட்டை சுழற்சி அதிரடி காட்டும் வீரராகவும் வலம் வந்துள்ளார். எனினும் இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் உள்ளது.

இதனால், ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று வருகிறார். ஐபிஎல்-ல் ஏமாற்றம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி வீரராக இருந்தபோதும், தற்போது அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த ஐபிஎல் சீசனில் முதல் பகுதியில் விளையாடிய ஹர்பஜன், 2வது பகுதியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். அவரின் ஃபார்ம் போய்விட்டதாக கூறி இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் பங்கேற்க போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 41 வயதாகும் ஹர்பஜன் அடுத்ததாக பயிற்சியாளர் அவதாரம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Harbhajan-Singh

விரைவில் நடக்க உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில், முன்னணி அணி ஒன்றில் ஹர்பஜன் சிங் ஆலோகராக அல்லது பயிற்சியாளர் குழுவில் இணையவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மெகா ஏலத்தின் போது வீரர்களை தேர்வு செய்ய அவரின் பணியை தான் பயன்படுத்தவிருக்கின்றனர். இதனால் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே ஹர்பஜன் தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

newstm.in

Tags:
Next Story
Share it