Theme Check

இளம்பெண்ணுடன் உல்லாசம்! சிறையில் திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்!

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையிலுள்ள ஒருவர் தனது காதலியை சிறை வளாகத்திலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம்..

இளம்பெண்ணுடன் உல்லாசம்! சிறையில் திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்!
X

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையிலுள்ள ஒருவர் தனது காதலியை சிறை வளாகத்திலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைசிங்கா பகுதியில் வசிக்கும் பிகாஷ் தாஸ் (25), திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தனது ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பல முறை உல்லாசம் அனுபவித்து வந்தார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இளம்பெண்ணுடன் உல்லாசம்! சிறையில் திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்!

இதனிடையே அப்பெண், பிகாஷ் தாஸ் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். அதன்படி போலீசாரால் பிகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இருவரின் குடும்பங்களும் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்க விரும்பினர். பிறகு குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தைத் தொடர்ந்து, இளைஞருக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க சிறை அதிகாரிகளிடம் அனுமதி கோரினர்.

இளம்பெண்ணுடன் உல்லாசம்! சிறையில் திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்!

இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்த பின்னர் சிறையிலுள்ள காதலனுக்கும், புகார் அளித்த பெண் அதாவது அவரது காதலிக்கும் போலீசார் சிறை வளாகத்தில் திருமணம் நடத்தி வைத்தனர். எனினும் பிகாஷ் தாஸ் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காததால் அவர் சிறையிலேயே உள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it