Theme Check

பிளஸ் டூ மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை அளிக்கிறது ஹச்.சி.எல் நிறுவனம் !!

பிளஸ் டூ மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை அளிக்கிறது ஹச்.சி.எல் நிறுவனம் !!

பிளஸ் டூ மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை அளிக்கிறது ஹச்.சி.எல் நிறுவனம் !!
X

அரசு பள்ளிகளில் 2021 - 2022 கல்வியாண்டில் பிளஸ் டூ படித்த மாணவ, மாணவிகளுக்கு தற்போது பெரும் வாய்ப்பு ஒன்று கிட்டியுள்ளது. அதாவது, தேர்வாகும் மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது தான் இந்த சிறப்பு.

அரசுப் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்விப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்களை தேர்வு செய்யும் வகையில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் 6 முதல் 12 மாதங்கள் இலவசமாக மென்பொருள் சார்ந்த படிப்புக்கு பயிற்சிபெறுவர்.

fgd

அதன்பின்னர் அந்நிறுவனத்திலேயே அவர்களுக்கு அதிக ஊதியத்தில் பணியமர்த்தவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பயிற்சி முடித்த பின்னர் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ஐடி இன்ஜினியரிங் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


newstm.in

Next Story
Share it