கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்!

கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்!

கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்!
X

அஜித் ரசிகர்கள் கோவில் பூசாரி ஒருவரிடம் வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது. அதற்கு காரணம் அந்த படத்தை குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை என்பது தான்.

வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அவரையும் ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. அவரிடம் அப்டேட் கேட்டது கூட பரவாயில்லை. பாஜக தலைவர் வானதி சீனிவாசன், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் என பலரிடம் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது சேட்டையின் உச்சம்.

பாஜக வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என வானதி சீனிவாசனும் கூறியிருந்தார். அவர் வெற்றி பெற்ற பிறகு ரசிகர்கள் அவரை அப்டேட் கேட்டனர்.


இந்நிலையில் கன்னியாகுமரியில் அஜித் ரசிகர்கள் கோயில் ஒன்றில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியாவது போனி கபூர் அப்டேட் தருகிறாரா என்று பார்க்கலாம்.

newstm.in

Tags:
Next Story
Share it